என் தமிழ்

48-ஆவது திருமுறை ஓதும் விழா : ஆகஸ்ட் 1, 2-ஆம் தேதிகளில் சிலாங்கூரில் நடைபெறுகிறது

31 ஜூலை 2026 : மலேசிய இந்து சங்கம், சிலாங்கூர் மாநிலப் பேரவை ஏற்பாடு செய்யும் 48-ஆவது திருமுறை ஓதும் விழா, வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், சிலாங்கூரின் பந்தார் சௌஜானா புத்ராவில் அமைந்துள்ள MAHSA பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திருமுறை ஓதுதல், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்ச் சைவ சமய மரபை எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முதல் நாள் நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி காலை 8.30 மணிக்கும், இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 7.30 மணிக்கும் தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சைவ சமயப் பாரம்பரியத்தையும், திருமுறைகளின் மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு மலேசிய இந்து சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Scroll to Top