கோலாலம்பூர், 14 செப்டம்பர் 2026 : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்திய அவர், விநாயகரின் திருநாமத்தை நினைத்து வழிபடுவதன் மூலம் கவலைகள் நீங்கி, வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கையைப் பகிர்ந்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரின் அருளும் ஆசீர்வாதமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் வளம் பெருக வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.







