என் தமிழ்

SJKT லாடாங் டயமண்ட் ஜூபிலி : EWRF மாநில சதுரங்கப் போட்டியில் 8 மாணவர்கள் பங்கேற்பு

மலாக்கா, 31 ஜூலை 2026 : மலாக்கா மாநில EWRF சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அளவிலான சதுரங்கப் போட்டி, கடந்த ஜூலை 25ஆம் தேதி ஆயர் குரோவில் அமைந்துள்ள WYF மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில், SJKT லாடாங் டயமண்ட் ஜூபிலி பள்ளியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் பங்கேற்று தங்களது சதுரங்கத் திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்:

  • லிதீஷா ஜெகதீசன் (ஆண்டு 2 – அல்லி)
  • ஸ்ரீஷா கோனார் இரவீந்திரன் (ஆண்டு 3 – முல்லை)
  • பவேஷ் ஜெகதீசன் (ஆண்டு 3 – முல்லை)
  • ஹனுஷா ஸ்ரீ பாலமுருகன் (ஆண்டு 3 – முல்லை)
  • ஷேஷா இரவீந்திரன் (ஆண்டு 4 – தும்பை)
  • கபிலன் மகேந்திரன் (ஆண்டு 4 – தும்பை)
  • நவிலாஷினி நாயர் சுரேந்திரன் (ஆண்டு 5 – மல்லிகை)
  • விபூஷ்ணன் நாயர் சுரேந்திரன் (ஆண்டு 6 – தாமரை)

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இத்தகைய போட்டிகள் மாணவர்களின் சிந்தனைத் திறன், கவனக்குவிப்பு மற்றும் போட்டி மனப்பான்மையை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் பள்ளி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Scroll to Top