என் தமிழ்

மலேசியா–பாகிஸ்தான் உறவை வலுப்படுத்த உயர்மட்ட சந்திப்பு : ரமணன்–பாகிஸ்தான் தூதர் ஆலோசனை

புத்ராஜெயா, 31 ஜூலை 2026 : மலேசியா–பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மலேசியாவுக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் சையத் அஹ்சான் ரஸா ஷாவை புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில், தொழிலாளர் துறையில் நிலவி வரும் உலகளாவிய மாற்றங்கள் மற்றும் அதற்கேற்ப மலேசியா–பாகிஸ்தான் இணைந்து செயல்பட வேண்டிய புதிய வாய்ப்புகள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

குறிப்பாக, திறன்மிக்க மனிதவள மேம்பாடு, தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நீடித்த தொழிலாளர் சூழலை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

மலேசியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு, பரஸ்பர மரியாதை மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் அடிப்படையில் எதிர்காலத்திலும் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Scroll to Top