புத்ராஜெயா, 16 ஜூலை 2026 : காஜாங், புத்ராஜெயா: ஸ்ரீ மகா சிவகாளியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு, ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று மாலை 6.00 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ஆலயத்தில் நேரில் செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம் என்றும், நேரில் வர இயலாதவர்கள் ஆலயத்தின் தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம் என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பூஜைக்கான காணிக்கையாக RM40 செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஆலயத்திலேயே செய்யப்பட்டுள்ளதாகவும், பூஜைக்கான பொருட்கள், பூக்கள் மற்றும் இதர தேவைகள் ஆலயத்தில் வழங்கப்படும் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.
ஆலயத்தின் எதிர்கால நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளைப் பெற விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






