என் தமிழ்

கல்வி மதானி : 315 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு MITRA கல்வி உதவித் திட்டம்

கோலாலம்பூர், 16 ஜூலை 2026 : மலேசிய இந்திய சமூக மாற்றுப் பிரிவு (MITRA), ‘கல்வி மதானி’ (Kalvi MADANI) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 315 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 10,410 மாணவர்களுக்கு கல்வி ஆதரவை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் 9 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு, மொத்தம் RM7,959,480 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் எதிர்கால முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநில வாரியான ஒதுக்கீட்டில் சிலாங்கூர் முதலிடத்தில் இருந்து 78 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 3,340 மாணவர்களுக்கு RM2,506,240 வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜொகூர் மாநிலத்தில் 41 பள்ளிகளுக்கு RM1,296,680, பேராக் மாநிலத்தில் 62 பள்ளிகளுக்கு RM1,134,440 ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வாரமான ஜூலை 2026 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல், திறமையான தலைமுறையை உருவாக்குதல், அவர்களின் ஆற்றலை வளர்த்தல் மற்றும் சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இன்றைய கல்வி, நாளைய சிறப்பு, நாட்டின் வலிமை” என்ற முழக்கத்துடன் செயல்படுத்தப்படும் இந்த கல்வி மடானி திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வாய்ப்புகளை வழங்கி, அவர்களை எதிர்கால சவால்களுக்கு தயார்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

Scroll to Top