என் தமிழ்

இரட்டைச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் : கல்விச் செலவை ஏற்றார் யுனேஸ்வரன் ராமராஜ்

செகாமாட், 16 ஜூலை 2026 : செகாமாட்டிலுள்ள கம்போங் புடு பகுதியில், மறைந்த நோராஸ்ரி ஒத்மான் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், அவரது இரட்டை மருமகன்களான ஹசான் மற்றும் ஹுசைன் ஆகியோரின் கல்விச் செலவுகளை இந்த ஆண்டு இறுதிவரை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, கடந்த 2024ஆம் ஆண்டு தாயை இழந்த இரட்டைச் சகோதரர்கள், தற்போது குடும்பத்தின் மற்றொரு நெருங்கிய உறுப்பினரையும் இழந்து பெரும் துயரத்தை எதிர்கொண்டிருப்பது தம்மை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இளம் வயதிலேயே இத்தகைய இழப்புகளைச் சந்தித்துள்ள ஹசான் மற்றும் ஹுசைனின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், அவர்களின் பள்ளிச் செலவுகளை இந்த ஆண்டு இறுதிவரை ஏற்றுக்கொள்வதாகவும், இதன் மூலம் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இரு மாணவர்களின் நலனும் கல்வியும் தொடர்ந்து கவனிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் உறுதியளித்தார்.

Scroll to Top