என் தமிழ்

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் எம். செகரனுக்கு ‘டத்தோ’ பட்டம்

பினாங்கு, 14 ஜூலை 2026 : பினாங்கு, ஜாலான் பாருவில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் டத்தோ மேஜர் (கௌரவ) எம். செகரன், பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான தார்ஜா செத்தியா பங்குவான் நெகிரி (DSPN) விருதைப் பெற்று, டத்தோ பட்டத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பினாங்கு மாநில ஆளுநர் துவான் யாங் தெரூத்தமா (TYT) யாங் டி-பெர்துவா நெகிரி வழங்கிய இந்த உயரிய அங்கீகாரம், சமூகப் பணி, சமயச் சேவை மற்றும் பொதுநலப் பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.

இந்தச் சிறப்பான கௌரவத்தை முன்னிட்டு, மலேசிய இந்து தர்ம மாமன்றம் – பினாங்கு சார்பில் டத்தோ எம். செகரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. சமூக நலன் மற்றும் இந்து சமய வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைகள் மேலும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

Scroll to Top