என் தமிழ்

லிமா 2027 : எட்டு புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பப் பிரிவுகள் அறிமுகம்

கோலாலம்பூர், 14 ஜூலை 2026 : 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (LIMA 2027), பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களை மையப்படுத்தும் வகையில் எட்டு புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தப் புதிய பிரிவுகளில் தன்னாட்சி கடல்சார் கப்பல்கள், ஆளில்லா வானூர்தி (UAV) தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட ஆயுத அமைப்புகள், செயற்கைக்கோள் தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், தரை வாகன அமைப்புகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண தொழில்நுட்பங்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.

‘கடல், வானம் மற்றும் விண்வெளியில் நிலைத்த பார்வை’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மலேசியாவின் பாதுகாப்பு, கடல்சார் மற்றும் வான்வெளி மையமாகிய நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிமா 2027 கண்காட்சியில் 36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 930 நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகப் பார்வையாளர்கள், சுமார் 4 லட்சம் பொதுமக்கள், 450 அனைத்துலக பிரதிநிதிகள், 110 விமானங்கள் மற்றும் 90 கடற்படை சொத்துகள் இடம்பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Scroll to Top