என் தமிழ்

செகாமாட் பள்ளிகளுக்கு ரூ.1.57 லட்சம் நிதி : அமைச்சர் யுனேஸ்வரன் உறுதி

செகாமாட், 14 ஜூலை 2026 : செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான யுனேஸ்வரன் ராமராஜ், செகாமாட் தொகுதியில் உள்ள பள்ளிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, எஸ்.கே. எல்.கே.டி.பி. பலோங் திமூர் 2 பள்ளிக்கு 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை மொத்தம் 1 லட்சத்து 57 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2023ஆம் ஆண்டில் பள்ளி மண்டபம் மேம்படுத்துதல், மேற்கூரையுடன் கூடிய நடைபாதை மற்றும் பிற வசதிகளுக்காக 40 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டில் வகுப்பறைகள், அலுவலகம் மற்றும் பள்ளி மண்டபத்திற்கான உபகரணங்களை மேம்படுத்த 30 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டில் பள்ளி தொலைக்காட்சி (TV) நிலையம் மற்றும் நூலக வள மையத்திற்கான உபகரணங்களை வாங்க 52 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிகள் மற்றும் விளையாட்டு மைதான உபகரணங்களுக்காக மேலும் 35 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி என்பது நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான முதலீடு எனக் குறிப்பிட்ட யுனேஸ்வரன், மாணவர்கள் தரமான கல்விச் சூழலில் பயிலும் வகையில் பள்ளி வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவது தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

Scroll to Top