சேராஸ், 14 ஜூலை 2026 : தேசிய அளவிலான ஃபிளாஷ் மனக்கணிதப் போட்டி 2026-இல் எஸ்.ஜே.கே.(த) பந்தார் மகோட்டா சேராஸ் பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில் கிஷன் பிரகாஷ் (5 செம்மல்), விதுரன் சசிந்திரன் (4 செம்மல்) மற்றும் தர்மிக்சிலன் குணசிலன் (4 ஆம்பல்) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மேலும், சஷ்வினி லோகநாதனைடு (4 ஆம்பல்) சிறப்பு அங்கீகார விருதைப் பெற்றார்.
மாணவர்களின் இந்தச் சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கற்றலின் மீது கொண்ட ஆர்வமே இந்த வெற்றிக்குக் காரணம் என அவர்கள் பாராட்டினர்.
எதிர்காலத்திலும் மாணவர்கள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சிறந்து விளங்கி, பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.






