என் தமிழ்

புலோ கசாப்பில் அமைச்சர் யுனேஸ்வரன் : உள்ளூர் மக்களுடன் நேரடி கலந்துரையாடல்

ஜோகூர், 05 ஜூலை 2026 : பத்து அனாமில் அமைந்துள்ள கான் ஷெங் கடல் உணவு உணவகத்தில் நடைபெற்ற மதிய விருந்தில், அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் உள்ளூர் சீன சமூகத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வில், புலோ கசாப் தொகுதிக்கான பகாத்தான் ஹராப்பான் கட்சியின் இரண்டாம் நிலை வேட்பாளர் ரோஸி ரஸித் மற்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சைடெக் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்வின் போது, மதானி அரசாங்கத்தின் அண்மைய மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், பல்வேறு இனங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தங்களது கருத்துகள், வளர்ச்சித் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முன்வைத்தனர்.

மக்களிடமிருந்து கிடைத்த அனைத்து ஆக்கப்பூர்வமான கருத்துகளும் டன் புலோ கசாப் மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார். மேலும், மக்களுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியின் மத்திய தலைமையைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Scroll to Top