என் தமிழ்

‘THE KERIS – பஹ்லவான் மெலாயு பெர்செஜாரா’ : ஜூலை 2 முதல் மலேசியா முழுவதும் திரையரங்குகளில்

கோலாலம்பூர், 02 ஜூலை 2026 : வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள THE KERIS – பஹ்லவான் மெலாயு பெர்செஜாரா’ திரைப்படம், ஜூலை 2 முதல் மலேசியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சிலாங்கூர், ஜொகூர், பேராக், பினாங்கு, கெடா, பகாங், சபா, சரவாக், நெகிரி செம்பிலான், தெரெங்கானு, பெர்லிஸ் உள்ளிட்ட மாநிலங்களில் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் பெர்ராபு (Viknes Perrabu) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் படம் மூன்று ஆண்டுகளாக கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படைப்பிற்கு உறுதுணையாக இருந்த இறைவன், குரு, தயாரிப்பு நிறுவனங்களான Mathe’s Production House, Tabitha Offshore Marine, M R Cinematic Creations, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மலேசிய ரசிகர்களுக்கு தரமான வரலாற்றுத் திரைப்பட அனுபவத்தை வழங்குவதே தங்களது நோக்கம் என்றும், இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். திரைப்படத்திற்கு பொதுமக்கள் தங்களது ஆதரவு, அன்பு மற்றும் வாழ்த்துகளை வழங்குமாறும், திரையரங்குகளில் கண்டு களிக்குமாறும் இயக்குநர் விக்னேஷ் பெர்ராபு கேட்டுக்கொண்டுள்ளார்.

Scroll to Top