என் தமிழ்

KEADILAN தேசிய மாநாடு : 150 கிளைத் தலைவர்களுடன் அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கலந்துரையாடல்

கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் 2026 : KEADILAN 2026 தேசிய மாநாட்டை முன்னிட்டு, நாடு முழுவதுமுள்ள சுமார் 150 KEADILAN கிளைத் தலைவர்களை ரமணன் ராமகிருஷ்ணன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், கட்சியின் அடிமட்டத் தலைவர்களிடம் இருந்து நேரடியாக அவர்களின் கருத்துகளையும், ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்கொள்ளப்படும் சவால்களையும் கேட்டறிந்ததாக ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்கான கட்சியின் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. கட்சியின் வலிமை அதன் கிளைகளில் இருந்தே தொடங்குகிறது என்றும், கிளைகள் வலுவாக இருக்கும்போது கட்சியின் இயந்திரமும் சிறப்பாக இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடிமட்டத் தலைமைத்துவம் மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் KEADILAN கட்சி மேலும் வலுப்பெறும் என அவர் தெரிவித்தார். தற்போது கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து, கட்சியின் இயந்திரத்தை மேலும் வலுப்படுத்தி, ஒரே அணியாக செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுதல், KEADILAN கட்சியை வலுப்படுத்துதல் மற்றும் சீர்திருத்தக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே கட்சியின் முக்கிய நோக்கங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Scroll to Top