16 ஆகஸ்ட் 2026 : முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானமான ‘X1’-ஐ அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது, X1 விமானம் சுமார் 1,100 அடி உயரம் வரை பறந்து, 27 நிமிடங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்தச் சோதனைக்காக சுமார் ரூ.477 மதிப்பிலான மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனையின் மூலம், பேட்டரி மூலம் இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய மின்சார விமானம் என்ற சாதனையை X1 பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, 30 பயணிகள் அமரக்கூடிய வணிகரீதியான மின்சார பயணிகள் விமானத்தை உருவாக்கும் பணியில் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.






