என் தமிழ்

தீ விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : கோபிந்த் சிங் தியோ பங்கேற்பு

கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் 2026 : Zon 6 மண்டலத்தில் நடைபெற்ற “Siri Keselamatan @ Zon 6: Program Kesedaran Keselamatan & Pencegahan Kebakaran” சமூக பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோபிந்த் சிங் தியோ கலந்து கொண்டார். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த அறிவும் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

குறிப்பாக, டிஜிட்டல் உலகில் பல்வேறு மின்னணு சாதனங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள நிலையில், அவற்றால் ஏற்படக்கூடிய தீ விபத்துகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளில் பாதுகாப்பாக கையாள்வதற்கும் தனித்துவமான விழிப்புணர்வு அவசியம் என அவர் குறிப்பிட்டார். Zon 6 மண்டல உறுப்பினர் குரத்துலைன் (குரா) ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, கலந்து கொண்ட சமூக உறுப்பினர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புதிய தகவல்களையும் நடைமுறை அறிவையும் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், சமூக உறுப்பினர்களிடையேயான தொடர்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவுவதாக கோபிந்த் சிங் தியோ கூறினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குரத்துலைனுக்கு பாராட்டு தெரிவித்த அவர், சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Scroll to Top