என் தமிழ்

செல்காம் டிஜி : உலகக் கோப்பை கால்பந்தை RTMKlik மூலம் ரசிகர்களிடம் கொண்டுசெல்லும் முயற்சி

பெட்டாலிங் ஜெயா, 01 ஜூலை 2026 : 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிக்கட்ட 32 அணிகளின் போட்டிகளை மலேசிய ரசிகர்கள் எளிதாகக் கண்டு ரசிக்கும் வகையில், RTMKlik ஒளிபரப்பின் ஆதரவாளர்களில் ஒருவராக செல்காம் டிஜி பெர்ஹாட் (CelcomDigi) இணைந்துள்ளது.

நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகள் பிரிவுத் தலைவர் சான் மே லிங் கூறுகையில், கால்பந்து மலேசியர்களை ஒன்றிணைக்கும் விளையாட்டாக இருப்பதால், வீடுகள், உணவகங்கள், மாமக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ரசிகர்கள் போட்டிகளை ஒன்றாகக் கண்டு மகிழ இந்த ஆதரவு உதவும் என்றார். நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வை அனைவருக்கும் நெருக்கமாகக் கொண்டு வருவதில் நிறுவனம் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

செல்காம் டிஜி வாடிக்கையாளர்கள் வீட்டு பிராட்பேண்ட் அல்லது மொபைல் டேட்டா மூலம் RTMKlik தளத்தில் போட்டிகளை இலவசமாகக் காணலாம். மேலும், CelcomDigi செயலியில் RM10 மதிப்பிலான Football Pass-ஐ வாங்குவதன் மூலம், உலகக் கோப்பையின் மீதமுள்ள போட்டிகளை 24 மணி நேரமும் வரம்பற்ற முறையில் ஒளிபரப்பாகக் காணும் வசதியும் வழங்கப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து உற்சாகம் நிறுவன ஊழியர்களிடையிலும் பரவி வருவதாக செல்காம் டிஜி தெரிவித்துள்ளது. ஜெர்சி அணியும் சிறப்பு நாட்கள், அலுவலகங்களில் போட்டிகளை ஒன்றாகக் காணும் நிகழ்ச்சிகள் மற்றும் கால்பந்து தொடர்பான நட்புறவு நிகழ்வுகள் மூலம் ஊழியர்கள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர். குழு ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கூட்டுப் பொறுப்பு போன்ற கால்பந்தின் அடிப்படை மதிப்புகளே நிறுவனத்தின் சேவையிலும் பிரதிபலிப்பதாக செல்காம் டிஜி குறிப்பிட்டுள்ளது.

Scroll to Top