இராக்கிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது, போர் விமானங்கள் மூலம் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. பாக்தாதுக்கு தென்மேற்குப் பகுதியிலுள்ள சிஞ்சாரில், ஐ.எஸ். உடன் சண்டையிட்டு வரும் இராக் ராணுவத்துக்கு உதவியாக இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இராக்கில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதையும் தாண்டி, ஐ.எஸ். க்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் அதிபரின் புதிய கொள்கை அடிப்படையில், இப்பகுதியில் முதல்முறையாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
Next Post: மைக்கேல் கிளார்க் விளையாடுவது சந்தேகம்.