ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் ஒன்று வெடித்து சிதறியது. குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றம், ராணுவத்தளம், போன்ற முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 நேட்டோ படையினர் உயிரிழந்தனர். மேலும் 5 நேட்டோ படையினர் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.