20 ஜூன் 2026 : மலேசிய இந்தியச் சிறுமியான சஞ்சிதா ரமேஷ், வெறும் 9 வயதிலேயே கினபாலு மலையின் உச்சியை அடைந்து சர்வதேச உலகச் சாதனை படைத்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 4,095 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலேசியாவின் புகழ்பெற்ற மவுண்ட் கினபாலு மலையை வெற்றிகரமாக ஏறியதன் மூலம், “கினபாலு மலையை வென்ற இளம் வயதுடைய மலேசிய இந்தியச் சிறுமி” என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சஞ்சிதா, திம்போஹோன் நுழைவாயிலில் இருந்து தனது மலையேற்றப் பயணத்தைத் தொடங்கி, நீண்ட மற்றும் சவாலான ஏற்றத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து மலையின் உச்சியை அடைந்தார். இந்த சாதனை அவரது உடல் வலிமை, மன உறுதி மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்துவதாகப் பாராட்டப்படுகிறது.
இந்த அபார சாதனை Jackhi Book of World Records (JBWR) அமைப்பினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உலகச் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே உலக அரங்கில் மலேசியாவிற்கும் இந்திய சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள சஞ்சிதாவின் இந்த சாதனை பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அவரது இந்த வெற்றிக்காக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.







