04 ஆகஸ்ட் 2026 : மறைந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் கவிதைகள் மற்றும் பாடல்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் சிறப்பு நிகழ்ச்சி, வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சிலாங்கூரின் பத்து கேவ்ஸில் அமைந்துள்ள ஷெங்கா மாநாட்டு மண்டபத்தில் (Shenga Convention Hall) நடைபெறவுள்ளது.
“நா. முத்துக்குமார் கவிதைகளும் கனியும்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பிரபல பாடகர் எம். சரவணன் கலந்து கொண்டு நா. முத்துக்குமாரின் படைப்புகளை இசை வடிவில் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை கவிஞர் சிவகுமார் நிவாஸகன்கோ தொகுத்து வழங்குகிறார். நா. முத்துக்குமாரின் இலக்கியப் பங்களிப்புகளையும், தமிழ் திரையிசையில் அவர் பதித்த தனித்துவமான தடத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நா. முத்துக்குமாரின் கவிதைகள் மற்றும் பாடல்களை நேசிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







