என் தமிழ்

400 மடங்குக்கும் அதிக லாபம் ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த ‘ஆப்செஷன்’

20 ஜூன் 2026 : குறைந்த தயாரிப்புச் செலவில் உருவான ஹாலிவுட் அமானுஷ்ய திகில் திரைப்படமான ஆப்செஷன் (Obsession), உலகளவில் 400 மடங்குக்கும் அதிக லாபம் ஈட்டி 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

சுமார் 10 கோடி ரூபாய்க்கும் குறைவான தயாரிப்புச் செலவில் உருவான இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.2,830 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து திரையுலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வருவாய் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் ‘ஆப்செஷன்’ முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படம், இசைக்கருவிகள் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவரது நிறைவேறாத காதலை மையமாகக் கொண்ட கதை, அமானுஷ்ய சக்தி கொண்ட பொம்மையின் வருகையால் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் திகில் அம்சங்களால் ரசிகர்களிடையே படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவிலும் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியான ‘ஆப்செஷன்’, குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவாகியும் உலகளாவிய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், திரைப்படத் துறையில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Scroll to Top