என் தமிழ்

‘The Grand Stage’ பாடல், நடனப் போட்டி : இளம் கலைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு

20 ஜூன் 2026 : மலேசியாவில் பாடல் மற்றும் நடனத் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் ‘The Grand Stage: The Ultimate Singing & Dance Battle‘ என்ற புதிய திறமையாளர் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Cinefest Malaysia ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையாளர்களுக்கு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் மேடையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பாடல் மற்றும் நடனப் பிரிவுகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பங்கேற்கலாம். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இந்தப் போட்டியின் மூலம் சிறந்த திறமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.

போட்டியின் அறிமுக நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலை மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு, இத்தகைய போட்டிகள் இளம் திறமையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கருத்து தெரிவித்தனர்.

நாட்டின் பல்வேறு இன, மொழி மற்றும் கலாசாரப் பின்னணியைச் சேர்ந்த இளைஞர்களை ஒரே மேடையில் இணைத்து, அவர்களின் கலைத்திறனை ஊக்குவிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், வெற்றியாளர்களுக்கு பணப் பரிசுகள், கோப்பைகள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் முன்னேறும் வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top