என் தமிழ்

உடம்பை வருத்திய விக்ரம்.

9

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நான் நடித்திருப்பது, கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். அந்த பாத்திரத்திற்காக 30 கிலோ உடல் எடையை கூட்டி குறைத்தேன். இதற்காக பசியையும் மறந்து 2 வருடங்களாக உடம்பை வருத்தி நடித்தேன். உடல் எடையை குறைக்கும் போது என்னைப் பார்த்து குடும்பத்தினரும், நண்பர்களும் பரிதாப்பட்டார்கள். இப்படி எல்லாம் உடம்பை வருத்தி நடிக்க வேண்டுமா? என்று கேட்டார்கள். இதற்கு பயந்தே நான் வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டேன். எனது ரசிகர்களைக் கூட சந்திக்கவில்லை. என்று கூறினார்.

Scroll to Top