12 ஜூன் 2026 : மலேசிய தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘வீர கருப்பு’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டின் அதிக வசூல் சாதனை படைத்த மலேசிய தமிழ் திரைப்படம் என FINAS (National Film Development Corporation Malaysia) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் RM1.88 மில்லியன் வசூலைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த வெற்றி, மலேசிய இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சியையும், உள்ளூர் தமிழ் படைப்புகளுக்கு மக்கள் வழங்கி வரும் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.
புகழ்பெற்ற இயக்குநர் தனேஷ் பெர்ராபு இயக்கத்தில் உருவான வீர கருப்பு, அதன் வலுவான கதை, சிறப்பான இயக்கம் மற்றும் தரமான தயாரிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
திரைப்படத்தின் நாயகனாக டாக்டர் காஷ் வில்லன்ஸ் நடித்துள்ளார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், திரைப்படத்தின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.
இத்திரைப்படம் காஷ் வில்லன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் டாக்டர் லட்சா பெர்ராபு தலைமையிலான சாய் நந்தினி மூவி வேர்ல்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ளது.
‘வீர கருப்பு’ திரைப்படத்தின் இந்த சாதனை, அதன் படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மலேசிய இந்திய கலைத்துறைக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது. மலேசிய தமிழ் திரைப்படங்கள் தேசிய அளவில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளதையும், புதிய உயரங்களை நோக்கி முன்னேறி வருவதைவும் இந்த வெற்றி உறுதிப்படுத்துகிறது.
‘வீர கருப்பு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் முழுப் படக்குழுவினருக்கும் இதயப்பூர்வமான பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.







