என் தமிழ்

U-18 ஆசிய ஹாக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா

ஜப்பான், 06 ஜூன் 2026 : 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசியக் கிண்ண ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் காலாண்டின் 12ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை கோலாக மாற்றிய அஷிஷ் தானி புர்த்தி இந்தியாவுக்கு ஆரம்ப முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

எனினும், பின்னர் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதி காலாண்டு வரை இந்தியா பின்தங்கியிருந்த நிலையில், அபாரமான மீள்வரவை நிகழ்த்திய இந்திய அணி தொடர்ச்சியாக கோல்களைப் பதிவு செய்து வெற்றியை உறுதி செய்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய அஷிஷ் தானி புர்த்தி நான்கு கோல்களை அடித்து அசத்தினார். அவரது தாக்குதல் ஆட்டம் இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது.

Scroll to Top