கோலாலம்பூர், 05 ஜூன் 2026 : மலேசிய இந்திய சமூக மாற்றுப் பிரிவு (MITRA) முன்னெடுக்கும் “ஆரோக்யா மதானி 2026” (Arogya MADANI) டயாலிசிஸ் மானிய உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோயாளிகளின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக MITRA தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தகுதி பெறும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அதிகபட்சமாக RM5,000 வரை மானிய உதவி வழங்கப்படும். 2026ஆம் ஆண்டில் சுமார் 1,300 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டயாலிசிஸ் நோயாளிகள் இந்த உதவித் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, B40 மற்றும் M40 வருமானப் பிரிவைச் சேர்ந்த இந்திய சமூக உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். மேலும், திட்டம் தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்களும் தனியாக வழங்கப்பட்டுள்ளன.
“ஆரோக்யா மதானி 2026” திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2026 ஜூன் 5 முதல் ஆகஸ்ட் 4 வரை ஏற்றுக்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தகுதியான பயனாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 03-8886 6239 / 6221 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது sks@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம் என MITRA தெரிவித்துள்ளது.
🌐 கீழ்க்காணும் இணைப்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்:
https://forms.gle/rvNPZ1rX4hpzAvVU8
📋 திட்ட வழிகாட்டுதல்கள் இணைப்பு:
https://drive.google.com/file/d/1F27B4cRubPWACEYTOlAFnx8ijKxeI2vO/view
இந்திய சமூகத்தின் நலனையும், சுகாதாரப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் மதானி அரசாங்கம் முன்னெடுத்து வரும் முக்கிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக “ஆரோக்யா மதானி 2026” கருதப்படுகிறது





