என் தமிழ்

SPM, STPM மாணவர்களுக்கு MITRA-வின் “டியூஷ்யென் மதானி” திட்டம் : விண்ணப்பங்கள் வரவேற்பு

கோலாலம்பூர், 05 ஜூன் 2026 : மலேசிய இந்திய சமூக மாற்றுப் பிரிவு (MITRA) மற்றும் மலேசிய மதானி அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் செயல்படுத்தப்படும் “டியூஷ்யென் மதானி (கல்வி மதானி) 2026” சிறப்புப் பயிற்சி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள (B40) இந்திய மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதுடன், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள SPM மற்றும் STPM பொதுத் தேர்வுகளுக்கான அவர்களின் தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 5,000 இந்திய B40 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சி மையங்களிடமிருந்து (Tuition Centres) சேவை வழங்குவதற்கான விண்ணப்பங்களும் (Request for Proposal – RFP) தற்போது வரவேற்கப்படுகின்றன. இதில் பங்கேற்க விரும்பும் கல்வி மையங்கள் மலேசிய கல்வி அமைச்சின் (KPM) கீழ் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், செயலில் உள்ள பயிற்சி மையப் பதிவு சான்றிதழ் மற்றும் SSM, SKM, ROS அல்லது ROC போன்ற செல்லுபடியாகும் பதிவு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களும் முழுமையாகவும் சரியான முறையிலும் சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் MITRA அறிவித்துள்ளது.

டியூஷ்யென் மதானி (கல்வி மதானி) 2026 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 5, 2026 முதல் ஜூன் 19, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் திட்டத்தின் முழுமையான வழிகாட்டுதல்களை QR குறியீடு அல்லது அதிகாரப்பூர்வ இணைப்புகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 03-8886 6192 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது spl@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவ இணைப்பு:
https://docs.google.com/…/1FAIpQLSdfff4…/viewform
விதிமுறைகள் இணைப்பு:
https://drive.google.com/…/1_rnrCbLkxaVObvuoWhcrgk4jpvf…

இந்திய சமூக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவித்து, உயர்கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக இந்த “கல்வி மதானி” திட்டம் கருதப்படுகிறது.

Scroll to Top