என் தமிழ்

இந்தோனேசியா ஓபன் 2026 : அரையிறுதிக்குள் அதிரடியாக முன்னேறிய கோ சே ஃபேய் – நூர் இஸ்ஸுதின் ஜோடி

ஜகார்த்தா[இந்தோனேசியா], 05 ஜூன் 2026 : இந்தோனேசியா ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், மலேசியாவின் கோ சே ஃபேய் – நூர் இஸ்ஸுதின் ரும்சானி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகத் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள மலேசிய ஜோடி, இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் – எம்.ஆர். அர்ஜுன் ஜோடியை நேர்செட் கணக்கில் 21-12, 21-10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

மொத்தம் 32 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தப் போட்டியில், தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கோ ஸ்ஸே ஃபெய் – நூர் இஸ்ஸுதின் ஜோடி, இந்தியாவின் உலகத் தரவரிசை 30ஆவது இடத்தில் உள்ள அணிக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் வெற்றியை வசப்படுத்தியது.

சிறப்பான தாக்குதல் ஆட்டம், துல்லியமான வலைப்பகுதி கட்டுப்பாடு மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் மலேசிய ஜோடி எளிதாக இரு செட்களையும் கைப்பற்றி, இந்தோனேசியா ஓபன் தொடரின் அரையிறுதிச் சுற்றில் இடம்பிடித்தது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோ ஸ்ஸே ஃபெய் – நூர் இஸ்ஸுதின் ஜோடி, இந்த வெற்றியின் மூலம் கோப்பியை வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக தங்களை நிலைநிறுத்தியுள்ளதாக பேட்மிண்டன் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றி, சர்வதேச அரங்கில் மலேசிய பேட்மிண்டனின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Scroll to Top