ஜோகூர், 26 மே 2026 : இந்து இளைஞர்களுக்கான “Path to Siva” என்ற ஒருநாள் ஆன்மிக மற்றும் வாழ்வியல் பயிற்சி நிகழ்ச்சி, வரும் ஜூன் 7ஆம் தேதி ஜோகூர் பாருவிலுள் தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் தம்போய் அருள் நிலையம் மற்றும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி, 15 முதல் 24 வயதுடைய இளைஞர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாம், சைவ சித்தாந்த தத்துவம், தர்மம், உள்ளார்ந்த ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் முன்னேற்றம் குறித்து இளைஞர்களுக்கு ஆழமான புரிதலை வழங்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில், இந்து சமயக் கொள்கைகள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகின்றன, மனதையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள், வாழ்க்கையின் நோக்கம், ஒழுக்கம் மற்றும் ஆன்மிக திசை குறித்த சிந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் எடுத்துரைக்கப்படவுள்ளன.
இந்த சிறப்பு அமர்வை அமெரிக்காவின் அமெரிக்கா, கவாய் இந்து மடாலயத்தைச் சேர்ந்த யோகிநாதசுவாமிகள் வழிநடத்தவுள்ளார். ஆழமான ஆன்மிக வாழ்க்கை, வழிகாட்டல் மற்றும் கலந்துரையாடலுக்கான வாய்ப்புகளும் இதில் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சி ஜோகூர் ஜெயா, தாமான் ஜோகூர் ஜெயாவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் முன்பதிவு செய்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பதிவு செய்ய:
https://forms.gle/BfAPLA6ECxkuWzUv9
மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள:
Mdm. சரோஜா: 013-7190240
Mrs. மகிஸ்வரி: 012-5290810
Mr. பாலகிருஷ்ணன்: 016-9839764





