என் தமிழ்

ஜோகூர் தேர்தல் : டாக்டர் மஸ்லீ மாலிக்கிற்கு ஆதரவு திரட்டிய அன்வார்

ஜோகூர், 10 ஜூலை 2026 : ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு புத்தேரி வாங்க்சாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் மஸ்லீ மாலிக்கிற்கு ஆதரவு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜோகூர் மக்களிடம் உரையாற்றிய அவர், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்து, மாநில மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் மீண்டும் நம்பிக்கை அளித்தால், ஜோகூரை மேலும் வளர்ச்சியடைந்த, வளமான மற்றும் கண்ணியமிக்க மாநிலமாக முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். “ஜோகூர் முன்னேறட்டும்; பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள்” என்றும் அவர் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Scroll to Top