என் தமிழ்

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு நாளை தொடக்கம்

சென்னை, 18 மே 2026 : சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய திரைப்படமான சேயோன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்க, நடிகர்கள் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தகவலின்படி, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் படப்பிடிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற பின்னணியில் உருவாகும் உணர்ச்சி மிகுந்த திரைப்படமாக ‘சேயோன்’ உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Scroll to Top