கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் 2026 : DAP கட்சியின் 2026 மாநாடு, கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், உறுப்பினர்களின் குரல்களைக் கேட்டறிந்து கட்சியின் எதிர்காலப் போராட்டப் பாதை குறித்து கலந்துரையாடுவதற்குமான முக்கிய தளமாக அமைந்துள்ளதாக கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
இந்த மாநாடு ஒரு தனிநபருக்கானது அல்ல என்றும், கட்சியின் போராட்டம் அனைவருக்கும் சொந்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து, அவற்றின் அடிப்படையில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும் போராட்டத்தின் திசையைத் தீர்மானிப்பதில் மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.






