கோலாலம்பூர், 10 மே 2026 : அன்னையர் தினத்தை முன்னிட்டு, மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அனைத்து தாய்மார்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
பேரவையின் தேசியத் தலைவர் மற்றும் நிர்வாகமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள சிறப்பு வாழ்த்து அறிக்கையில், தாய்மார்கள் குடும்பத்தின் அடித்தளமாகவும், அன்பு, தியாகம் மற்றும் உறுதியின் நிரந்தர சின்னமாகவும் திகழ்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அளவற்ற அன்பு, நிபந்தனையற்ற தியாகம் மற்றும் ஒப்பற்ற மனவலிமை ஆகியவற்றின் மூலம், ஒவ்வொரு குடும்பத்திலும் தாய்மார்கள் முக்கிய தூணாக விளங்குகின்றனர். எப்போதும் ஒளியாகவும், பாதுகாவலராகவும், வலிமையின் ஆதாரமாகவும் இருப்பதற்காக அனைத்து அன்னைகளுக்கும் நன்றி,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கடவுளின் அவதாரமாகத் திகழும் அனைத்து அன்னைகளுக்கும் இனிய அன்னையர் நாள் நல்வாழ்த்துகளை மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை தெரிவித்துக் கொள்கிறது,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.






