கோலாலம்பூர்,10 மே 2026 : மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பங்கேற்கும் இந்திய மாணவர்களுடனான சிறப்பு நட்புறவு நிகழ்ச்சி இன்று மலாயா பல்கலைக்கழகத்தின் துங்கு வேந்தர் அரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கேசுமா (KESUMA) வழங்கும் தொழில் வாய்ப்புகள், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET), திறன் மேம்பாட்டு திட்டங்கள், கல்வி உதவிகள் மற்றும் பல்வேறு சுய முன்னேற்ற முயற்சிகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு பெறுகின்றனர்.
மேலும், நிகழ்வில் அமைக்கப்பட்டுள்ள கேசுமா அரங்கில், JPK, JTM, SOCSO, HRD Corp, TalentCorp, PTPK, NIOSH, DOKKP மற்றும் MITRA உள்ளிட்ட பல்வேறு முகமைகள் பங்கேற்று தகவல் சேவைகள், தொழில் ஆலோசனைகள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன.
இந்த நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






