என் தமிழ்

மலேசியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்காக KESUMA – MIMOS கைகோர்ப்பு

புத்ராஜெயா, 09 மே 2026 : மலேசியாவின் தொழில்நுட்பத் திறனாளர்கள் மற்றும் எதிர்கால பணியாளர்களை உருவாக்கும் நோக்கில், மனிதவள அமைச்சகம் (KESUMA) மற்றும் MIMOS Berhad இடையே முக்கியமான மூலோபாய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன், MIMOS Berhad குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சாத் சுக்ரி எம்போங் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, KESUMA-வின் திறன் மேம்பாட்டுத் துறை (JPK), மனிதவளத் துறை (JTM) மற்றும் MIMOS ஆகியவற்றுக்கிடையில் திறன் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, குறைக்கடத்தி (Semiconductor) தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிக தாக்கம் செலுத்தும் துறைகளில் நாட்டின் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கும், மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார நோக்கத்திற்கும் ஏற்ப, தொழில்நுட்ப மேம்பாடு, திறன் பயிற்சி மற்றும் எதிர்கால பணியாளர்களை உருவாக்கும் விரிவான ஒத்துழைப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இருதரப்பும் விவாதித்தன.

இந்த ஒத்துழைப்பு, நாட்டின் தொழில்நுட்பத் திறமையாளர் மேம்பாட்டுச் சூழலமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, இரு தரப்பிற்கும் விரிவான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நன்மைகளை வழங்கும் என அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை வெளியிட்டார்.

Scroll to Top