என் தமிழ்

கல்வியில் சிறந்த மாணவிக்கு கரம் நீட்டிய மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவை

பினாங்கு,09 மே 2026 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவை தனது 49வது ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிக்கு நிதி உதவி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தது.

நிபோங் தெபால் பகுதியைச் சேர்ந்த மாணவி கே. நெயமலர் குரு, எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாக 9A பெறுபேறுகளைப் பெற்று, அமெரிக்காவில் உள்ள United World College கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பு தொடர 75 சதவீத உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.

அவரது வெளிநாட்டு பயணம் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவையின் நலத்துறை பிரிவு ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுத்து, மொத்தமாக RM2,100 தொகையை சேகரித்தது.

இந்த நிதியுதவி, ஸ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன் AMN அவர்களின் முன்னிலையில், மாநிலத் தலைவர் விவேக நாயகன் தர்மன் ஆனந்தன் PKT PJK PJM சாட்சியமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு, இளைஞர்களை கல்வி வாயிலாக முன்னேற்றுவதிலும், அவர்களின் கனவுகளுக்கு ஊக்கமும் சமூக ஆதரவும் வழங்குவதிலும் மலேசிய இந்து சங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

மாணவி நெயமலரின் கல்விச் சாதனையைப் பாராட்டிய பேரவை உறுப்பினர்கள், அவர் வெளிநாட்டில் கல்விப் பயணத்தை வெற்றிகரமாக தொடர வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Scroll to Top