கோலாலம்பூர், 29 ஏப்ரல் 2026 : இளம் கலைஞர் ஜோயல் ஜாக்சனின் பரதநாட்டிய அரங்கேற்றம் வரும் மே 30-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தன் ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.
“சேவனின் மகிமை” எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த அரங்கேற்றம், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான பாரம்பரிய நடன அனுபவத்தை வழங்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டினா பால் அவர்களின் மகனான ஜோயல் ஜாக்சனின் இந்த முக்கிய கலை நிகழ்வு, பாரம்பரிய பரதநாட்டியத்தின் அழகையும் இளம் திறமையின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்விற்கான நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு ரிங்கிட் 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உணவும் உட்படுகிறது.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவோ அல்லது கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் முன்பதிவு செய்யவோலாம்:
பதிவு இணைப்பு: https://forms.gle/3MyJdNzgfpK1mA5x7
மேலும் தகவல்களுக்கு:
ஜோயல் ஜாக்சன்: 017-6590968
சித்தார்த்: 011-69209060
இந்த அரங்கேற்றத்திற்கு குடும்பத்தினர், நண்பர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






