சிரம்பான், 27 ஏப்ரல் 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முதன்முறையாக பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்கும் மாபெரும் இசைக் கச்சேரி வருகிற ஜூலை 11ஆம் தேதி சிரம்பானில் நடைபெற உள்ளது.
“ஸ்ரீநிவாஸ் நேரலை இசைக் கச்சேரி” என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, ரீஜென்ட் மண்டபத்தில் மாலை 7.01 மணிக்கு தொடங்கவுள்ளது. பல தலைமுறைகளின் மனதை கவர்ந்த இனிமையான பாடல்களால் ரசிகர்களை மயக்கிய ஸ்ரீநிவாஸ், தனது புகழ்பெற்ற பாடல்களை நேரடியாக ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சி பாடல்கள் மட்டுமின்றி நினைவுகள், காதல், உற்சாகம் மற்றும் இசை உணர்வுகளின் சங்கமமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மற்றும் சர்வதேச தமிழ் இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸுடன் இணைந்து சரண்யா, ஜீவன் பத்மகுமார், திவினேஷ், சபேசன், சிவானி நவீன், ஸ்ரீஹரி ரவீந்திரன், சுசந்திகா ஜெய் மற்றும் வர்ஷா எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் மேடையை பகிரவுள்ளனர். அதோடு “ஆறு ஸ்ட்ரிங்ஸ்” நே லை இசைக்குழு நிகழ்ச்சிக்கு கூடுதல் விறுவிறுப்பை வழங்கவுள்ளது.இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விரைவாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு சிவாவை தொடர்புகொள்ளலாம். தமிழ் இசையை நேசிக்கும் ரசிகர்களுக்கு, இது தவறவிடக்கூடாத இசை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
For tickets : https://www.ticket2u.com.my/event/49422/srinivas-saregama-season-5-live-concert






