கோலாலம்பூர், 27 ஏப்ரல் 2026 : இளம் கலைஞர் திவ்யா மயூரி ஆறுமுகத்தின் மிருதங்க அரங்கேற்றம் (லய பிரவேசம்) வரும் மே 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் சாந்தானந்த அரங்கில் நடைபெறவுள்ளது.
தி டெம்பிள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வில், ஸ்ரீ தர்மன் கிருஷ்ணனின் சீடையான திவ்யா மயூரி ஆறுமுகம் தனது இசைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லை எட்டவுள்ளார்.
மிருதங்கக் கலையில் அவரது திறமையை வெளிப்படுத்தும் இந்த அரங்கேற்றம், இசை ஆர்வலர்கள் மற்றும் கலை ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்விற்கு முன் மாலை 5 மணி முதல் சிற்றுண்டியும் வழங்கப்படவுள்ளது.
இசை மற்றும் பாரம்பரியக் கலை வளர்ச்சியை முன்னிறுத்தும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு இளம் கலைஞரை ஊக்குவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






