என் தமிழ்

ஈப்போவில் ராஜி சில்க் பேலஸ் புதிய கிளை திறப்பு

ஈப்போ, 27 ஏப்ரல் 2026 : மலேசியாவில் 19வது கிளையாக ராஜி சில்க் பேலஸ் புதிய கிளை இன்று ஈப்போவில் திறந்து வைக்கப்பட்டது. புதிய கிளையை திறந்து வைத்துப் பேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன், இந்த திறப்பு உள்ளூர் வணிகத் துறையின் வளர்ச்சியை பிரதிபலிப்பதோடு, சமூகத்திற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என தெரிவித்தார்.

இந்த புதிய கிளை திறப்பு, உள்ளூர் சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிக முன்னேற்ற வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, இந்திய பாரம்பரிய ஆடைகளின் பல்வகைத் தேர்வுகள் மூலம் நாட்டின் பன்முக பண்பாட்டு மரபையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

இந்திய சமூகத்தின் பாரம்பரியத்தை அன்றாட வாழ்க்கையில் கொண்டாடும் முயற்சியாகவும், சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முன்னெடுப்பாகவும் இந்த நிறுவனம் திகழ்கிறது என அவர் குறிப்பிட்டார்.

புதிய கிளை திறப்பு, பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்கும் மேலும் ஊக்கமளிக்கும் முக்கிய படியாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top