என் தமிழ்

மலேசிய தேசிய நூலக விருதில் தமிழ்ப் படைப்பாளர்கள் கவுரவம்

கோலாலம்பூர், 27 ஏப்ரல் 2026 : மலேசிய தேசிய நூலகத்தின் 2025-2026 புத்தக விருதுகள் நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில் தமிழ்ப் படைப்பாளர்கள் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆங்கில மின்னூல் பிரிவில் டாக்டர் தமிழ் செல்வன் ரமேஷ் விருது பெற்றார். பெரியவர்களுக்கான நாவல் பிரிவில் அண்ணாமலை சவரிமுத்துவின் சஞ்சீவினி இரட்டை விருதுகளை வென்று கவனம் பெற்றது.

தமிழ் சிறார் இலக்கியத்தில் பாலமுருகன் கேசவனின் உயாங் மலை இரு பிரிவுகளில் விருதுகளை வென்றது. சிறந்த சிறார் இலக்கிய எழுத்தாளர் மற்றும் சிறந்த சிறார் நூல் பதிப்பாளர் என்ற இரு அங்கீகாரங்களையும் அவர் பெற்றார்.

கட்டுரை பிரிவில் முனைவர் சி. அருணின் கேரித் தீவு ஆய்வு நூல் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டது. மேலும், திவாவகர் இராமசந்திரன் எழுதிய நூல் மக்கள் தேர்வில் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது.

இந்த விருதுகள், மலேசிய தமிழ் இலக்கிய உலகின் படைப்பாற்றல் மற்றும் பங்களிப்புகளுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகின்றன. விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Scroll to Top