என் தமிழ்

செலாயாங் ‘ஸ்ரீ பாலா இல்லம்’ விவகாரம்: குழந்தைகள் பாதுகாப்புக்கு Briged MIC குரல்

15 ஏப்ரல் 2026 : செலாயாங் பகுதியில் உள்ள ‘Sri Bala Ilam’ என்ற அங்கீகரிக்கப்படாத குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடைபெற்றதாக கூறப்படும் குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், Briged MIC மற்றும் Pertubuhan Kebajikan dan Kebangkitan Tiga Tangan அமைப்பினர் அம்பாங் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானனர்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த இந்த பராமரிப்பு மையம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Malaysiakini மற்றும் Malaysia Gazette செய்திகளின்படி, இந்த வழக்கு பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளையும், குழந்தைகளுக்கு எதிரான கடுமையான துஷ்பிரயோகங்களையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, Briged MIC இந்த வழக்கை சாதாரண குற்றமாகக் கருத முடியாது என்றும், குழந்தைகளின் பாதுகாப்பும் எதிர்காலமும் தொடர்புடைய இந்தக் குற்றங்களில் நீதிக்கு எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசு சாரா அமைப்புகள் (NGO) தங்களது பகுதிகளில் உள்ள நலவாழ்வு இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், CCTV வசதி, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலை ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

அதே நேரத்தில், Royal Malaysia Police (PDRM) மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகள், இத்தகைய பராமரிப்பு மையங்களை முறையாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பராமரிப்பு மையங்களின் உரிமையாளர்கள் உடனடியாக சரணடைந்து, சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆதரவும் ஆறுதலும் தெரிவித்த Briged MIC, எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்களை தடுக்கும் முயற்சிகள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளது.

Scroll to Top