சென்னை, 13 ஏப்ரல் 2026 : நடிகர் Vijay நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
‘ஜனநாயகன்’ படம், விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என்ற தகவல்கள் முன்னதாகவே வெளியாகியுள்ளன. அவர் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளதால், திரைத்துறையிலிருந்து விலகலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அளித்த விளக்கத்தில், விஜய் மீண்டும் நடிப்பாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது எதிர்கால முடிவுகள் முழுவதும் தனிப்பட்ட தீர்மானமாக இருக்கும் என்றும், தற்போதைக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவகாரங்களிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படம் தாமதம், சென்சார் சிக்கல்கள் மற்றும் கசிவு விவகாரம் போன்ற காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் மீண்டும் திரைக்கு வருவாரா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.





