பெங்களூரு, 06 ஏப்ரல் 2026 : 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் Royal Challengers Bangalore மற்றும் Chennai Super Kings அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. பின்னர் 251 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் Ruturaj Gaikwad பேசியபோது, இறுதியில் 200 ரன்களை கடந்தது ஆச்சரியமாக இருந்ததாகவும், அதற்கான பாராட்டுகள் சர்பிராஸ் கான், ஓவர்டன் மற்றும் பிரசாந்த் வீருக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தாம் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்றும் கூறினார். இந்த தோல்விக்கு தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
டிம் டேவிட்டின் விக்கெட்டை எடுத்தபோதும் அது ‘நோ-பால்’ ஆக மாறியதால், அதன் பிறகு அவர் சிறப்பாக விளையாடி அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
13 மற்றும் 14வது ஓவர்கள் வரை போட்டி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அதன் பின்னர் ஆட்டம் கைநழுவியதாகவும் ருதுராஜ் தெரிவித்தார்.





