என் தமிழ்

போர் பதற்றம் குறைக்க ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

பீஜிங், 06 ஏப்ரல் 2026 : பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நீண்டகாலமாக பயங்கரவாத ஊடுருவல் மற்றும் மோதல்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. குறிப்பாக, தலீபான் ஆதரவு அமைப்பான டி.டி.பி. (TTP) உறுப்பினர்கள் பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர்.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 800 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாதிகளின் 286 முகாம்கள், 249 போர்த் டேங்கர்கள் மற்றும் பல நவீன ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலவும் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லைப் பகுதி பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top