டெஹ்ரான், 05 ஏப்ரல் 2026 : ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடத்தப்பட்டதாக கூறப்படும் மிகப்பெரிய தாக்குதலில், பல முக்கிய ராணுவ தலைவர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதள பதிவில், “டெஹ்ரானில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலில் ஈரானின் பல ராணுவ தலைவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்” என அவர் கூறியதுடன், தாக்குதலைக் காட்டும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
ஆனால், இந்த தாக்குதல் குறித்து முழுமையான விவரங்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கை அல்லது தாக்குதலின் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த சம்பவம், அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நடந்ததாக கூறப்படுகிறது. சமீப காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு தாக்குதல்கள், எதிர்தாக்குதல்கள் இடம்பெற்று, மேற்கு ஆசியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் உடனடி உறுதிப்படுத்தல் அல்லது மறுப்பு வெளியாகாத நிலையில், சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.





