என் தமிழ்

நிலவுக்கு மனிதர் மீண்டும் பயணம் : ஆர்டெமிஸ்-2 சோதனை வெற்றி

அமெரிக்கா,  04 ஏப்ரல் 2026 : NASA நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் தனது லட்சிய திட்டத்தை மீண்டும் முன்னெடுத்து வருகிறது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, ஆர்டெமிஸ்-2 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கனடாவைச் சேர்ந்த ஒருவரை உட்பட 4 விண்வெளி வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி வந்து, விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்தனர். அதன் பின்னர் ‘டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்’ எனப்படும் என்ஜின் இயக்கத்தின் மூலம் நிலவை நோக்கி பயணிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் மூலம், நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும் நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையை இந்த குழுவினர் படைக்க உள்ளனர். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.8.64 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, 2028ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களின் நிலவு தரையிறக்கம் (ஆர்டெமிஸ்-4) திட்டத்திற்கான முக்கிய முன்னோட்டமாக அமைகிறது.

இதற்கிடையில், நிலவுக்குப் பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து பிரியும் தருணத்தில் அதன் நீல நிற அழகை படம் பிடித்துள்ளனர். அந்த புகைப்படத்தை NASA வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்த படம் வைரலாக பரவி வருகிறது.

Scroll to Top