என் தமிழ்

அமெரிக்காவில் புதிய கொரோனா வகை பரவி வருகிறது – 25 மாநிலங்களில் கண்டறிதல்

வாஷிங்டன், 31 மார்ச் 2026 : 2024ஆம் ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்று, 2025ஆம் ஆண்டில் வேகமாக பரவி 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு பரவலாக காணப்பட்ட ஒமைக்ரான் வகையின் தொடர்ச்சியாக உருவான இந்த புதிய வகையில், அதன் புரதத்தில் 70 முதல் 75 வரை மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் மத்தியில் தொற்று அதிகரித்திருந்தாலும், உடனடி பெரிய ஆபத்து நிலை இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் இந்த புதிய வகைக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்குவதில் குறைந்த அளவிலேயே பயனுள்ளதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம், வைரஸ் தொடர்ந்து வேகமாக மாற்றமடைந்து பல்வேறு வடிவங்களில் தோன்றுவதாகும்.

குறிப்பாக, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று, பின்னர் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பல அலைகளாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதும் நினைவுகூரத்தக்கது.

Scroll to Top