அகமதாபாத், 31 மார்ச் 2026 : சிலிக்கான் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் செமிகண்டக்டர்கள், மின்சாதனங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு தேவையான சிப்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட அன்றாட தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இந்த சிப் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக முன்னேறி வரும் நிலையில், செமிகண்டக்டர்களின் தேவையும் உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பல நாடுகள் செமிகண்டக்டர் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
அதேபோல், இந்தியாவிலும் செமிகண்டக்டர் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





